கயத்தாறு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த வடை மாஸ்டர் - உறவினர் மீது சந்தேகம் என இறந்தவரின் தங்கை கதறல்- காவல்துறையினர் விசாரணை !
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கடம்பூர் சாலை இரட்டைக்குளம் அருகே மர்மமான முறையில் தனி நபர் ஒருவர் இறந்து கிடந்ததாக கயத்தாறு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் ஆய்வாளர் சிலுவை அந்தோணி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கயத்தாறு கந்தசாமி மகன் ஆனந்தராஜ் (44) திருமணம் ஆகவில்லை என்பதும் குடிப்பழக்கம் உள்ளவர் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இறந்த ஆனதராஜ், அவரது உறவினர் ஜான் மகன் தாமஸ் என்பவரும் நேற்று 01.11.2025 அதிகாலை ஐந்து மணிக்கு அதிகமாக மது அருந்திவிட்டு தாமஸ் மற்றும் இறந்த ஆனந்தராஜ்வும் உடன் பிறந்த தங்கை அமிர்த வள்ளி வீட்டிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது பின்பு இருவரும் நேற்று காலை 7 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பியவர்கள் இன்று வரை வீட்டிற்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் கயத்தாறில் இருந்து கடம்பூர் செல்லும் மெயின் ரோடு அருகே உள்ள இரட்டைக்குளம் கம்மா கரையில் விரைத்து போய் இறந்து கிடந்துள்ளார் ஆனந்தராஜ் மூக்கிலும் வாயிலும் அடிபட்ட காயம் உள்ளது உடனே உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
ஆனந்தராஜ் தங்கை அமிர்த வள்ளி தனது அண்ணனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார்,அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.