தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அழகேசபுரம் கந்தையா மகன் ராம்தேவன்(22)  மற்றும் ஆறுமுகநேரி பகுதியில் மளிகை கடையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட செல்வராஜ் மகன் பாலாஜி (28) ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவின் பேரில் இதுவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்...