ஆடுகள் மற்றும் ஒரு இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (51) என்பவர் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆடுகள் மற்றும்,அதே பகுதியை சேர்ந்த பாண்டித்துரை (31) வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிய, ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் பகுதியை சேர்ந்த அம்மாமுத்து (25), மற்றும் ரமேஷ் (25) ஆகிய இருவரையும் ஆழ்வார் திருநகரி போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஆடுகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் விசாரணை.