நாளை சுப முகூர்த்த தினம் என்பதால் தூத்துக்குடி பூச்சந்தையில் பூக்களின் விலை இரு மடங்கு உயர்வு 200 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ பிச்சிப்பூ 600 ரூபாய்க்கு விற்பனை ஊட்டி ரோஸ் கட்டு 250 ரூபாய்க்கு விற்பனை.நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் தூத்துக்குடி பூச்சந்தைக்கு ஓட்டப்பிடாரம் ,புதியம்புத்தூர், பேரூரணி ,அணியாபரநல்லூர், செட்டிமலம்பட்டி உள்ளிட்ட பகுதியிலிருந்து பூக்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.ஆனால் பூக்களின் வரத்து குறைவாகவே காணப்பட்டது. இதன் காரணமாக பூக்களின் விலை உயர்ந்தது கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ மற்றும் பிச்சிப்பூ கிலோ 500 முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகிறது.
மேலும் கல்யாண மாலை கட்ட பயன்படும் ரோஜா பூ கட்டு 150 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக உயர்ந்துள்ளது. சுப முகூர்த்த தினங்கள் தற்போது தொடர்ந்து வருவதால் பூக்களின் விலை தொடர்ந்து உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
சுப முகூர்த்த தினம் என்பதால் பூக்களின் விலை இரு மடங்கு உயர்வு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
போலி செய்தியாளர்கள் வசூல் வேட்டை - மக்களே உஷார்...!
அடுத்த
பெண் மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக மூன்று கால் சக்கர வாகனம் வழங்கிய அமைச்சர் கீதா ஜீவன்!
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026