தூத்துக்குடி அண்ணாநகர் 4-வது தெருவைச் சேர்ந்த ஈனமுத்து மகன் செந்தில் ஆறுமுகம் இவர் வழக்கறிஞர் மற்றும் தொழிலதிபராகவும் அப்பகுதியில் மெடிக்கல் மற்றும் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த (11.05.2024) இரவு மெடிக்கல் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை அடைத்து விட்டு இரண்டு தெருவு அருகே உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் செந்தில் ஆறுமுகத்தை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான போலீசாருக்கு தீவிர விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கொலையுண்ட செந்தில் ஆறுமுகம் என்பவருக்கும் - அவரது தங்கையின் கணவரான நாலாட்டின்புதூர் ஜீவன் காலனியைச் சேர்ந்த லெனின் மகன் கோபிநாத் (37) என்பவருக்கும் சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கோபிநாத் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான பெரியநாயகம் மகன் சங்கர் (எ) சங்கரலிங்கம் (28), மூக்காண்டி மகன் மணிகண்டன் (26), தூத்துக்குடி சத்யாநகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் ராம்குமார் (25), தூத்துக்குடி P & T காலனியைச் சேர்ந்த காட்டுராஜா மகன் தமிழ்செல்வம் (24) மற்றும் தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் மகன் ஸ்ரீநாத் (22) ஆகியோருடன் சேர்ந்து செந்தில் ஆறுமுகத்தை, அவரது வீட்டருகே வைத்து அவரை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் உடனடியாக 24 மணி நேரத்தில் குற்றவாளிகளான 1. கோபிநாத், 2. சங்கர் (எ) சங்கரலிங்கம், 3. மணிகண்டன், 4. ராம்குமார், 5. தமிழ்செல்வம் மற்றும் 6. ஸ்ரீநாத் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ததில் கொலையுண்ட செந்தில் ஆறுமுகத்தின் உடன்பிறந்த தங்கையின் கணவரான கோபி, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்ததும், கோபியும், சங்கர் என்ற சங்கரலிங்கமும் கொலை செய்துவிட்டு, போலீசிடம் சிக்காமல் தப்புவதற்காக மேற்படி இருவரும் இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் ரோட்டின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதியதில் அவர்கள் கை உடைந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது...
தூத்துக்குடி
நாய் குறுக்கே வந்ததால்தான்... குற்றவாளிகள் கை உடைந்தது - போலீசார் தகவல்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய 68 வது திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்!
அடுத்த
கமுதி மாணவிக்கு பாஜக அண்ணாமலை ரூ.25 ஆயிரம் வழங்கி வாழ்த்து மடல்!
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026