தூத்துக்குடியில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் காவல்துறை பேரிடர் மீட்பு படை!

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே கனமழை பெய்து வருவதை முன்னிட்டு ஆபத்துக் காலங்களில் அவசர உதவிக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாவட்ட காவல்துறையில் 4 பேரிடர் மீட்பு படை குழுக்கள் உருவாக்கப்பட்டு மீட்பு உபகரணங்களுடன் எந்நேரமும் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்..அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் . ஆயுதப்படை  வளாகத்தில்,  மேற்படி தூத்துக்குடி மாவட்ட  காவல்துறை பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.