தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 3,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் முத்தையாபுரம் தங்கமணி நகரை சேர்ந்த ராஜசேகர் மகன் அரவிந்த் (25) என்பவரை தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திரு. மாதவ ராமானுஜம் அவர்கள் இன்று (28.10.2024) குற்றவாளியான அரவிந்த் என்பவருக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 3,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் திருமதி. எல்லம்மாள் அவர்களையும் விசாரணைக்கு உதவியாக இருந்த காவலர் திரு. சிவன்ராஜ் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ‌‌.கா.ப அவர்கள் பாராட்டினார்.