கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 10 வருடங்கள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 3,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் கோவில்பட்டி கீழபாண்டவர் மங்கலம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் மதன் (39) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திரு. மாதவ ராமானுஜம் அவர்கள் இன்று (28.10.2024) குற்றவாளியான மதன் என்பவருக்கு 10 வருடங்கள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 3,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பத்மாவதி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் திருமதி. எல்லம்மாள் அவர்களையும் விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் தலைமை காவலர் திருமதி. லெட்சுமி, பெண் காவலர் திருமதி. முருகலட்சுமி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ‌‌.கா.ப அவர்கள் பாராட்டினார்.