திருச்செந்தூர் அருகே கேரளா தம்பதியினரை கொலை செய்த  குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம்  (PCR Court) அதிரடி தீர்ப்பு வழங்கி நீதியை நிலை நாட்டிய நீதிபதி!


கேரள மாநிலம் மூணாறு கோதமங்களம் பகுதியைச் சேர்ந்த தேவ சிங் (எ) தேவசியா (எ) சாக்கோ (60/13) மற்றும் அவரது மனைவி மேரி (50/13) ஆகியோர் கடந்த 2013 ஆம் வருடம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு வந்து கடற்கரை அருகில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோவில் அருகே குடிசை அமைத்து பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.


இந்நிலையில் கடந்த 17‌.10.2013 அன்று மேற்படி கணவன் மனைவி தங்கியிருந்த இடத்திற்கு வந்த குலசேகரன்பட்டினம் உடன்குடி பிள்ளையார் பெரியவன்தட்டு பகுதியைச் சேர்ந்த அமச்சியார் மகன் செல்வம் (43/24) என்பவர் மேற்படி மேரியிடம் தவறாக பேசி தொந்தரவு செய்துள்ளார். இதனை மேரியும் அவரது கணவரும் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம் மேற்படி மேரி மற்றும் அவரது கணவர் தேவசிங் (எ) தேவசியா (எ) சாக்கோ ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டியதில் மேரி சம்பவ இடத்திலும் மேரியின் கணவர் 19.10.2013 அன்று மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரி செல்வத்தை கைது செய்தனர்.





இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 


இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திரு. உதயவேலவன் அவர்கள்  (05.11.2024) குற்றவாளியான செல்வம் என்பவருக்கு ஒவ்வொரு கொலைக்கும் தனித்தனியாக ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் வித்து தீர்ப்பு வழங்கி மேற்படி தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.


இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் அவர்களையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்  பூங்குமார் அவர்களையும் விசாரணைக்கு உதவியாக இருந்த  தலைமை காவலர் திரு. முருகன் ஆகியோரையும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.