தூத்துக்குடி அருகே மின்கம்பத்தின் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு.


தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர் நகர் பகுதியை சேர்ந்த சொர்ணம் மகன் சத்யநாராயணன் (32), இவர் காரில் ஸ்பீக் நகர் துறைமுகம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது, இதில் படுகாயம் அடைந்த சத்திய நாராயணனை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்,சத்தியநாராயணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.