தூத்துக்குடியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த 2020-ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணையில், தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை பெரியசாமிபுரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு (35), தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் இன்று 29-01-2025 நடைபெற்ற விசாரணையில், குற்றவாளி சக்திவேலுக்கு 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 6000 அவதாரம் வழங்கி நீதிபதி சுரேஷ் தீர்ப்பு வழங்கினார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 2 லட்சம் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி,விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் தலைமை காவலர் ரபிலாகுமாரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.