தூத்துக்குடி அருகே கோவில் பூசாரி வெட்டிக்கொலை!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி - பெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் முருகேசன் (54), இவர் காயல்பட்டினத்தில் உள்ள சுடலைமாடசாமி கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று முருகேசன் பூஜை செய்யும் கோவில் அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதனை அடுத்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் பூசாரி முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இந்தக் கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் பூசாரி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.