தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் டீ மாஸ்டர் உயிரிழப்பு!



தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி கிராமத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு என்பவரின் மகன் சிவக்குமார் (40) இவர் அப்பகுதியில்உள்ள டீ கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில்  இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த சிவக்குமார் படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.