சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார்:தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!



தூத்துக்குடி பாரம்பரியமான பழைமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.  இந்த கல்லூரியின் 50வது ஆண்டு பொன்விழா நிறைவிழா தொடக்க நிகழ்ச்சியாக சமய நல்லிணக்க விழா நடைபெற்றது. 

நடைபெற்ற விழாவிற்கு ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் மீராசா தலைமை தாங்கினார். அரபிக் கல்லூரி தலைவர் சகாப்தின்,  செயலாளர் அபூபக்கர்,  ஆகியோர் முன்னிலை வைத்தனர்.இதில்.அரபிக் கல்லூரி மாணவர்கள் அப்துல் ரகுமான்,  சலாவுதீன் ஆகியோர் கிராத் ஓதினர். அனைவரையும் அரபிக் கல்லூரி துணை முதல்வர் அஸ்ரார் அகமது,  வரவேற்று பேசினார்.

‌இதில் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ் மாவட்ட அரசு காஜி முஜிபுர் ரகுமான்,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ்கான் எம்பி, மேயர் ஜெகன் பெரியசாமி, கிறிஸ்துவ வாழ்வுரிமை இயக்க மாநில அமைப்பாளர் ஜேம்ஸ் விக்டர்,  தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் பழரசம் விநாயகமூர்த்தி,  டிஎம்பி வங்கிமேனேஜிங் டைரக்டர் சாலி நாயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 

50 ஆவது ஆண்டு பொன்விழா மலரை வெளியிட்டு அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது,சிறுபான்மை மக்களுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக இருப்பவர்தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.

மேலும் நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் ஆனால் அதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தற்போது மத்தியில் ஆளும் அரசு மதத்தின் பெயரால் பிரிவினையை உண்டு பண்ணி வருகிறார்கள் 

ஆனால் திமுகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் திராவிட மாடல்தான் கொள்கை என்ற வகையில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். என்றார்.   மேலும் பல்கலைக்கழகங்களில் கல்விக்கு தொடர்பு இல்லாதவர்களை துணைவேந்தராகவும் பேராசிரியராக நியமிக்கலாம் என்ற சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது இதற்கு நாம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.‌

இதைத்தொடர்ந்து சென்னை ஜாமியா பள்ளிவாசல் அரபிக் கல்லூரி முதல்வர் சம்சுதீன் கலந்து கொண்டு மனிதநேயம் குறித்து பேசினார்.  முடிவில் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி பொருளாளர் சையது சுலைமான் நன்றி கூறினார். 


இந்தநிகழ்ச்சியில் ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அழிம், இமாம் சதக்கத்துல்லா, ஜாமியா பள்ளிவாசல் செயலாளர் எம்.எஸ்.எப் ரகுமான் துணைத் தலைவர் சாகுல் சிராஜுதீன் பொருளாளர் இப்ராகிம் மூசா, பேராசிரியர்கள் இஸ்மாயில்,  செய்யது அப்பாஸ், அப்துல் கனி,  கிராண்ட் பள்ளி செயலாளர் முகமது உவைஸ், முஸ்லிம் சமுதாய நலச்சங்க தலைவர் ஏ கே மைதீன், சம்சுதீன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.