நாகலாபுரம் மற்றும் பசுவந்தனை வியாபாரி சங்க தலைவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் பகுதியில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு நாகலாபுரம் வியாபாரிகள் நல சங்கம் சார்பாக 13 சிசிடிவி கேமராக்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது அதேபோன்று பசுவந்தனை வியாபாரி நல சங்கம் மற்றும் பசுவந்தனை ஐக்கிய வியாபாரி சங்கம் பசுவந்தனை நாடார் சங்கம் மற்றும் வெற்றிலாபுரம் பரணி பாதுகாப்பு சேவை ஆகியோர் இணைந்தும் அப்பகுதியில் புதிதாக 12 சிசிடிவி கேமராக்கள்  நிறுவப்பட்டுள்ளது.


குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு மொத்தம் 28 சிசிடிவி கேமராக்கள் பொருத்திய வியாபாரி சங்கம் மற்றும் தன்னார்வலர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு  நேரில் அழைத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.