எதுவுமே புரியாமல் சிலர் பேசிக் கொண்டிருக்கின்றனர் நாங்கள் ஆட்சி அமைத்து விடுவோம் என்று!
*பாவம் அவங்களுக்கு , அரசியல் அனுபவம் கிடையாது, இன்னைக்கு திடீர்னு வந்து அரசியலில் குதித்தவர்களுக்கு எது மாநில ஆட்சி எது ஒன்றிய ஆட்சி என்ற வித்தியாசம் கூட தெரியாது * - எட்டயபுரத்தில் நடைபெற்ற திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் * நடிகர் விஜய் மற்றும் த.வெ.கவை மறைமுகமாக சாடி பேசிய கனிமொழி எம்பி!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தமிழக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் கனிமொழி எம்பி கலந்து கொண்டு பேசுகையில், ஓரணியில் திரளுவோம் என்று முதல்வர் மு க ஸ்டாலின் நமக்கு தந்துள்ள சிறப்பான வாய்ப்பு ஒவ்வொரு வீடாக சென்று மக்களை சந்தித்து கேள்விகளைக் கேட்டு பதில் பெற வேண்டும். தமிழகத்தில் உள்ள மக்களுக்கு கொஞ்சம் மறதி அதிகம். செய்யக்கூடிய நல்ல திட்டங்களை எல்லாம் மறந்து விடுவார்கள். அடுத்து என்ன பண்ணவில்லை என்பதைத்தான் கேள்வி கேட்பார்கள், கேள்வி கேட்க வேண்டும். அதற்காக தான் படிக்க வைத்துள்ளார்கள். நம்முடைய இயக்கம் தொடர்ந்து மக்களை சிந்திக்க கூடியவர்களாக, தமிழக மக்கள் படித்து பட்டம் பெற்றவர்களாக மாற்ற வேண்டும் நினைப்பது கேள்வி கேட்பதற்காகத்தான், திமுக அரசு மக்களுக்கு செய்த நல்ல திட்டங்களை நினைவு படுத்தக்கூடிய வாய்ப்பாக இது அமைந்துள்ளது எல்லோரும் பயன்படக்கூடிய திட்டங்கள் இருக்கிறது. அதனை நினைவுபடுத்தும் வாய்ப்பாக அமைந்துள்ளது,தமிழகத்திற்கு நிதி பிரச்சனையை உருவாக்கக்கூடிய ஒன்றிய அரசு,நம்முடைய குழந்தைகளுக்கு மருத்துவ கல்வி கிடைக்காமல் செய்யும் ஒன்றிய அரசு ,நம் மீது இந்திய திணிக்கக்கூடிய ஒன்றிய அரசு, பாராளுமன்றத்திற்கு கூடிய நமது 39 உறுப்பினர்களை குறைக்க முயற்சி செய்யும் ஒன்றிய அரசு,தமிழகத்திற்கு துரோகம் செய்பவர்களுடன் கூட்டணி வைத்திருக்கிறது, அதிமுக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதினார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி போராடி தான் பெற்றிருக்கிறோம். சாதாரணமாக நாம் பெறவில்லை. இதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்...எதுவுமே புரியாமல் சிலர் பேசிக் கொண்டிருக்கின்றனர் நாங்கள் ஆட்சி அமைத்து விடுவோம் என்று, அவர்களுக்கு எந்த அனுபவமும் கிடையாது. அவர்களுக்கு ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் வித்தியாசம் தெரியவில்லை
அதனால தேர்தலில் வாக்குறுதிகள் கொடுத்தீர்கள் என்று கேட்பார்கள். சென்ற தேர்தலில்(நாடாளுமன்றத் தேர்தல்) கொடுத்த வாக்குறுதியில் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் வந்தால் செய்து தருகிறோம் என்று சொன்னோம், ஆட்சி மாற்றம் வரவில்லை, தமிழகத்தில் வெற்றி பெற்றால் மட்டும் ஆட்சி மாற்றம் வந்துவிடாது,
பாவம் அவங்களுக்கு அரசியல் அனுபவம் கிடையாது, இன்னைக்கு திடீர்னு வந்து அரசியலில் குதித்தவர்களுக்கு எது மாநில ஆட்சி எது ஒன்றிய ஆட்சி என்ற வித்தியாசம் கூட தெரியாமல் கேள்வி கேட்பார்கள் மக்களுக்கு எடுத்துச் செல்லக்கூடிய வாய்ப்பு,ஏனெனில் இத்தனை நெருக்கடிகளை தாண்டி தமிழகத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் என்றால், போராட வேண்டுமென்றால், அனுபவம் இருக்க வேண்டும் ,நம்முடைய முதல்வர் போன்று நீண்ட நெடிய அனுபவம் கொண்ட முதல்வர்தான் தமிழகத்துக்கு தேவை என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு வாய்ப்பாக இதனை கட்சி நிர்வாகிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
விரைவில் தமிழக முதல்வர் பெயரில் தமிழக முழுதும் முகாம்கள் நடைபெற உள்ளது. தகுதி இருந்து விடுபட்ட மகளிர் உரிமைதொகை கிடைக்கப்படாதவர்கள் விண்ணப்பிக்கலாம், பட்டா பெயர் மாற்றம் என மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் முகாமில் மக்களுக்கு இலவச மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது ,வட மாநிலங்களில் வாக்காளர் பெயர் பட்டியலில் குழப்பங்களை ஏற்படுத்தி பாஜக வெற்றி பெற்றுள்ளது.
டெல்லியில் முதல்வராக இருந்த ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் தொகுதியில் வாக்காளர் பெயர் பட்டியலில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர்.
இதேபோன்று மகாராஷ்டிரா ஹரியானா போன்ற மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது, எனவே தமிழகத்தில் வாக்காளர் பெயர் பட்டியலை சரி பார்க்க வேண்டும். வாக்காளர் பட்டியல் தான் நமது வெற்றிக்கான முதல் படி என்பதை திமுக கட்சியினர் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும என்றார்.