தூத்துக்குடியில் ரேஷன் கடைக்குள் கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை?
தூத்துக்குடி திரவியபுரம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (46), இவர் தூத்துக்குடி முனியசாமிபுரத்தில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் கடைக்கு பொருட்கள் இறக்க சென்ற லோடுமேன் கடையை திறந்து பார்த்தபோது, ராமகிருஷ்ணன் தூக்கில் தொங்கியதை பார்த்து லோடுமேன் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாக்கம் காவல் நிலைய போலீசார் ராமகிருஷ்ணன் உடலை மீட்டு , ராமகிருஷ்ணன் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் தென்பாக்கம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.