தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 450 லிட்டர் பெட்ரோல் பறிமுதல்; ஒருவர் கைது.
தூத்துக்குடி, திரேஸ்புரம் பகுதியில் இருந்து பைபர் படகு மூலம் இலங்கைக்கு பெட்ரோல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி, தனிப்படை போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது, கடற்கரையில் தயார் நிலையில் இருந்த ஒரு பைபர் படகை சோதனை செய்த போது தலா 50 லிட்டர் வீதம் 9 கேன்களில் 450 லிட்டர் பெட்ரோல் மற்றும் இன்ஜின் ஆயிலை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூபாய் 5 லட்சம் என கூறப்படுகிறது.
மேலும் படகில் இருந்த அலங்காரதட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (33), என்பவரை கைது செய்தனர். படகின் உரிமையாளரான இனிகோ நகரை சேர்ந்த போஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி
இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 450 லிட்டர் பெட்ரோல் பறிமுதல்
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
1200 வருட பழமையான கொற்றவை சிற்பம்! வரலாற்று ஆர்வலர்கள் தகவல்.
அடுத்த
தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026