தூத்துக்குடி அருகே தொழில் நஷ்டம் காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் விஷம் குடித்து தற்கொலை?


தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் - சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்த குரூஸ்முத்து என்பவரின் மகன் ஜெயக்குமார் (46), இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவர் செய்து வந்த ரியல் எஸ்டேட் தொழிலில் பெரிதும் நஷ்டம் ஏற்பட்டதால் மனவிரத்தில் இருந்த ஜெயக்குமார் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.