எட்டையாபுரத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கிய ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் - போலீசார் விசாரணை!



தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் புலிமால் தெரு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஸ்ரீராம். இவர் நேற்று இரவில் தனது ஆட்டோவில் ஒரு பயணியை ஏற்றுக் கொண்டு புலிமால் தெருவில் இருந்து விளாத்திகுளம் புறவழிச் சாலைக்கு சென்று கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக தெருவுக்குள்ள அதிவேகமாக வந்த மினி லோடு ஆட்டோ , ஸ்ரீராம் ஆட்டோ மீது மோதுவது போல் வந்துள்ளது. இது குறித்து ஸ்ரீராம் அவர்களிடம் கேட்டபோது வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது மட்டுமின்றி தாக்கியுள்ளனர். மேலும் பைக்கில் வந்த ஒருவரும் ஸ்ரீராமை தாக்கிவிட்டு சென்றுள்ளனர். அந்த மினி லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தி கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாக்குதலில் காயம் அடைந்த ஸ்ரீராம் சிகிச்சைக்காக எட்டையாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து எட்டையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் ஆட்டோ டிரைவரை தாக்குதல் நடத்திய சம்பவம் எட்டையாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.