பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நில வழிகாட்டி மதிப்பு ,முத்திரைத்தாள் கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம், சேவை கட்டணம், ஆகியவற்றை தமிழக அரசு பத்திரப்பதிவுத்துறை குறைக்க வலியுறுத்தி தூத்துக்குடி பத்திர பதிவு அலுவலகம் முன்பு இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.தூத்துக்குடியில் தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலதரகர்கள் நலச்சங்கம் சார்பில் தமிழக அரசு மற்றும் பத்திரப்பதிவு துறை பல மடங்கு உயர்த்தி உள்ள நில வழிகாட்டி மதிப்பு பத்திரப்பதிவு கட்டணம் முத்திரைத்தாள் கட்டணம் சேவை கட்டணம் ஆகியவற்றை குறைக்க வலியுறுத்தியும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிகார துஷ் பிரயோகங்களில் ஈடுபடும் சார் பதிவாளர்களை கண்டித்து தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாநில துணை அமைப்புச் செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் சேகர், செயலாளர் முத்துராமன், பொருளாளர் கார்த்திகேயன், ரியல் எஸ்டேட் அதிபர் கோபால், மகளிர் அணி செயலாளர் மாதவி, முத்துராஜ், செல்வம், ஏராளமான நிலத்தரகர்கள் கலந்து கொண்டு தமிழக அரசு மற்றும் பத்திரப்பதிவு துறைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தூத்துக்குடி
ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இந்தி திணிப்பதை கண்டித்து தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
அடுத்த
மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்.
இதையும் படிக்கலாம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி உட்பட மூன்று பேர் கைது!
30 Sep 2026
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026