தூத்துக்குடிக்கு வருகை தரும் பிரதமர் மோடி!
புதுப்பிக்கப்பட்ட தூத்துக்குடி - வாகைகுளம் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 28-ம் தேதி திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து குலசேகரப்பட்டினத்தில் உள்ள ராக்கெட் ஏவுதலத்தை பார்வையிடுகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இந்திய விமான நிலைய ஆணையத் தலைவர் விபின் குமார் தலைமையில் நடைபெற்றது.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மற்றும் விமான நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.