தூத்துக்குடியில் உள்ள தமிழக அரசின் மின்வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் 1வது அலகு பழுது காரணமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 3வது அலகும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளதால் சுமார் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு. தூத்துக்குடியில் உள்ள தமிழக அரசின் மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின்நிலையம் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் 5 அலகுகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முறையாக பராமரிப்பு செய்யப்படாத காரணமாக அடிக்கடி அனல் மின் நிலையத்தில் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இன்று அனல் மின் நிலையத்தின் 1வது அலகில் கொதிகலனில் ஏற்பட்ட பஞ்சர் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஏற்கனவே 3வது அலகில் பராமரிப்பு பணிக்காக நேற்று 16-7-23 இரவு முதல் 15 நாட்கள் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் அனல்மின் நிலையத்தில் சுமார் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக மின்வெட்டு அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு காரணமாக மின்வெட்டு அதிகரிக்கும்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கீழஈரால் கிராமத்தில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
அடுத்த
தூத்துக்குடி சிவன் கோவில் தெருவில் மரக்கன்று நடும் பணி!
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026