எட்டையபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த பழுதாகி நின்ற லாரி மீது மோதி போஸ்ட் மாஸ்டர் சம்பவ இடத்திலேயே பலி!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள எத்திலப்பன்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் சிவகுமார் (45) எட்டயபுரம் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல இன்று இரவு பணி முடிந்து பேரிலோவன்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் எட்டையபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சிந்தலக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது, கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் கைலாஷ் (31) என்பவர் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கோயம்புத்தூருக்கு இரும்பு பொருட்களை டாரஸ் லாரியில் ஏற்றுக்கொண்டு சென்று கொண்டிருந்த நிலையில் லாரி திடீரெனப் பொழுதாகி சாலையில் நின்றதால், லாரியின் பின்னால் வந்து கொண்டிருந்த போஸ்ட் மாஸ்டர் சிவகுமார் லாரியின் பின்பகுதியில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் உயிரிழந்த போஸ்ட் மாஸ்டர் சிவக்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.