கடந்த 04.05.2024 அன்று தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த செல்வேந்திரன்(57) என்பவரது வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்த ரூபாய் 2 லட்சம் பணம் மற்றும் 45 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிய, ஏரல் பகுதியை சேர்ந்த விஜயராஜ் மகன் சத்திய முகேஷ் (எ) சதீஷ் (24) என்பவரை ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் உள்ள நிலையில், மேற்படி கைது செய்யப்பட்ட சத்திய முகேஷ் (எ) சதீஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அவர்கள் ஏரல் சேதுக்குவாயத்தான் பகுதியைச் சேர்ந்த விஜயராஜ் மகன் சத்திய முகேஷ் (எ) சதீஷ் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஷேக் அப்துல் காதர் மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.