தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்தவர் கைது: 22 கிலோ கஞ்சா பறிமுதல்!



தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் குரு வெங்கட்ராஜ் மேற்பார்வையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மீஹா தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் ரவிக்குமார், ராஜபிரபு மற்றும் போலீசார் நேற்று (13.10.2025) தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் உழவர் சந்தை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக இருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டியை சேர்ந்த எட்வின் தங்கராஜ் மகன் ஜேம்ஸ் செல்லத்துரை (25) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனடியாக போலீசார் மேற்படி செல்லத்துரையை கைது செய்து அவரிடமிருந்த 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.