புரட்டாசி மாத
கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு,தூத்துக்குடியில்
உள்ள பழமையான வைகுண்டபதி பெருமாள் கோயிலில் பெருமாள் வெங்கடாசலபதி அலங்காரத்தில்
பக்தர்களுக்கு காட்சியளித்தார்.ஆயிரக்கணக்கான
பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்றபடி தரிசனம் செய்து வருகின்றனர்.
புரட்டாசி மாதம்
பெருமாளுக்கு உகந்த மாதமாகும் அதுவும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் வைணவ
ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.
பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் புரட்டாசி
மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பழமையான வைகுண்டபதி
பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை 4;30 மணி அளவில் நடை திறக்கப்பட்டு முதலில் கோ பூஜையும் பின்னர் விசுவ ரூப
தரிசனமும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து
வெங்கடாசலபதி அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார் வெங்கடாசலபதி
அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை
நடைபெற்றது.புரட்டாசி மாத
கடைசி சனிக்கிழமை என்பதால் இன்று அதிகாலை முதல் வைகுண்டபதி பெருமாள் கோவிலில்
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றபடி பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.ஆலயத்திற்கு
வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் புளியோதரை தயிர்
சாதம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி
நீண்ட வரிசையில் நின்றபடி வெங்கடாசலபதியை தரிசனம் செய்து வருகின்றனர்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கிடாரிகுளம் கிராமத்தில் புரட்டாசி மாத பொங்கல் உற்சவவிழா!
அடுத்த
போலி செய்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அவசர அறிக்கை?
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026