எட்டயபுரம் அருகே போலீசார் ரோந்து சென்றகார் விபத்துக்குள்ளாகி ஒருவர் பலி _ உதவி ஆய்வாளர் உட்பட 4 பேர் படுகாயம்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மணல் கடத்துவதாக எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது இதனையடுத்து எட்டயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவ ராஜா, காவலர் அற்புத சாமி இருவரும் மாதவ ராஜாவின் சொந்த காரில் அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது உதவி ஆய்வாளருடன் காரில் எட்டயபுரம் தெற்கு ரத வீதியைச் சேர்ந்த அருண் குமார் , ராஜா, கார்த்திக், உள்ளிட்ட 3 பேரும் சென்றுள்ளார். தாப்பாத்தி, முத்தலாபுரம், சிந்தலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை வழியாக எட்டயபுரம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்த பொழுது சிந்தலக்கரை துரைச்சாமிபுரம் விலக்கு அருகே வரும் பொழுது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரின் மீது மோதி எதிர்புறம் உள்ள சாலைக்கு சென்று சாலையோர கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் காரில் இருந்த அருண் குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்
மேலும் படுகாயம் அடைந்த உதவி ஆய்வாளர் மாதவ ராஜா, அற்புதராஜா,கார்திக்,
ராஜா உள்ளிட்ட 4 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் .இந்த விபத்து தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.