கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை !



தூத்துக்குடி மாவட்டம்  ஸ்ரீவைகுண்டம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த புலமாடன் மகன் வண்ணமுத்து (65) மற்றும் அவரது மனைவி உலகம்மாள் ஆகிய இருவரையும் அவர்களது வீட்டருகே வைத்து கடந்த 12.05.2018 அன்று நில பிரச்சினை காரணமாக புதுக்குடி உலகம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த செல்லதுரை பாண்டியன் மகன் மாயாண்டி (எ) ரவி (62) மற்றும் அவரது மனைவி, அவரது மகன் ஜோதி மணிகண்டன் (28) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தவறாக பேசி கை, கம்பு மற்றும் அரிவாளால் தாக்கிய வழக்கில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் Cr. No. 116/18 U/S. 294(b),323,307,506(ii) & 4 of TNPHW Act ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மேற்படி மாயாண்டி (எ) ரவி, அவரது மனைவி மற்றும் ஜோதி மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.


இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி முருகன் இன்று (18.06.2025) குற்றவாளிகளான மாயாண்டி (எ) ரவிக்கு சட்டப்பிரிவு 323ன் படி ஒரு வருடம் கடுங்காவல் சிறை தண்டனை, ரூபாய் 1000/- அபராதமும், எதிரி ஜோதி மணிகண்டன் என்பவருக்கு சட்டப்பிரிவு 307ன் படி 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூபாய் 5,000/- அபராதமும், மாயாண்டி (எ) ரவியின் மனைவியை விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் திருமதி. எல்லம்மாள் அவர்களையும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் சந்திரா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.