தூத்துக்குடி அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.
தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் கிராமத்தை சேர்ந்த பர்னபாஸ் ஜோஸ்வா(51),இவர் தனது நண்பர் ஜான் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சாயர்புரம் நம்மாழ்வார் தெரு அருகே வந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த பர்ணபாஸ் ஜோஸ்வா
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சாயர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.