தூத்துக்குடியில் திருமணமான புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை?
தூத்துக்குடி கீழ அலங்காரதட்டு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (25), மீனவர் ஆன இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அன்சியா (23) என்பவருடன் திருமணம் நடைபெற்றது, இந்நிலையில் குடும்ப பிரச்சினைகாரணமாக ஒரு வாரத்திற்கு முன்பு அன்சியா கோபித்துக் கொண்டு தாளமுத்து நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார், இந்நிலையில் கணவர் போனில் பேசாத காரணத்தினால் விரக்தியடைந்த அன்சியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை.
மேலும் அவருக்கு திருமணம் ஆகி 5 மாதங்களே ஆவதால் தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு மேல் விசாரணை நடத்தி வருகிறார்.