விளாத்திகுளம் அருகே ரூ.16.45-லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் மகாத்மா காந்தி ஊரக தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16.45-லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.
உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரவிந்த் வெங்கடாசலம் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய பொறியாளர் தமிழ்ச்செல்வன், உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.