மாணவ மாணவிகள் தன்னம்பிக்கையுடன் எதையும் கற்றுக் கொண்டால் வெற்றி பெற முடியும் தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பேசினார். தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் துவங்கி வைத்து பேசும்போது தமிழக முதல்வர் அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும் என்பதற்காக வானவில், நான் முதல்வன், உள்ளிட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.இந்த திட்டத்தின் மூலம் மாணவ மாணவிகள் படித்து முடித்தவுடன் வேலை வாய்ப்பு உருவாக்க முடியும் என்றார்,மேலும் தாங்கள் பள்ளிக்காலம் என்பது ஒரு முக்கியமான காலம் இந்த காலத்தில் நீங்கள் எதை கற்றுக் கொடுத்தாலும் கற்றுக்கொள்ள முடியும் ஆகையினால் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் எதையும் கற்றுக் கொண்டால் வெற்றி பெற முடியும். தாங்கள் கண்ணாடி முன் நின்று தன்னால் முடியும் முடியும் என்ற தன்னம்பிக்கையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் அப்போது நீங்கள் வெற்றி பெற முடியும் என மாணவிகளுக்கு தன்னம்பிக்கை வளர்க்கும் வகையில் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தன்னம்பிக்கையுடன் எதையும் கற்றுக் கொண்டால் வெற்றி பெற முடியும்:அமைச்சர் கீதா ஜீவன்!
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026