கனிமொழி எம்பி யை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் ஆவடி நாசர்!



தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் மீது, ஆவின் பால் கொள்முதலில் கவனம் செலுத்த தவறியது, வெளி மாநிலங்களில் பால் பவுடர் வாங்குவது, ஆவின் பால் விநியோகத்தில் மாற்றம் என பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் ஆவடி கவுன்சிலராக இருந்த நாசர் மகன் ஆசிங்ராஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன, அதோடு ஆசிங்ராஜாவின் கட்சிபதவிகள்பறிக்கப்பட்டன, பின்னர் ஆவடி நாசர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு,தற்போது சிறுபான்மை நலத்துறையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ஆவடி நாசர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திமுக துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.  இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, ராஜீவ் காந்தி  உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.