திருச்செந்தூரில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் காவல் சிறை தண்டனை!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பழனியப்பபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா(28/25) என்பவரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கணம் நீதிபதி. முருகன் இன்று (19.09.2025) குற்றவாளி இசக்கிராஜா என்பவருக்கு 10 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூபாய் 5000/- அபராதம் தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திரா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் .எல்லம்மாள்,விசாரணைக்கு உதவியாக இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் லிங்ககனி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 24 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.