தூத்துக்குடி அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முக்கானி பகுதியை சேர்ந்த கோபால் மகன் கணேச மூர்த்தி (38),இவர் தினமும் மது அருந்திவிட்டு மனைவி பேச்சி முத்தம்மாளிடம் சண்டை போடுவதாக கூறப்படுகிறது.
இதனால் பேச்சி முத்தம்மாள் கடந்த 5ஆம் தேதி தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்த கணேச மூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.