பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போல் தூத்துக்குடியில் விதவை இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி ரூபாய் 10 லட்சம் வரை அபகரித்த சம்பவத்தால் பரபரப்பு பாதிக்கப்பட்ட பெண் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் குற்றவாளிகளுக்கு சாதகமாக காவல்துறையினர் செயல்படுவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார்.
தூத்துக்குடி அண்ணா நகரை சார்ந்தவர் 36 வயதான இளம் விதவைப் பெண், இவருக்கு கடந்த 10-ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியை சேர்ந்த வரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு தற்போது 8 வயதில் மகள் உள்ளார்.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இளம் பெண்ணின் கணவர் உடல் நல குறைவால் இறந்துவிட்டார். தற்போது, தனது மகளுடன் வயதான பெற்றோருடன் வசித்து வருகிறார். தனது வீட்டு அருகே ஜெராக்ஸ் கடை வைத்து தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு நடந்த பாலியல் அத்துமீறல் குறித்து அவர் கூறுகையில், தூத்துக்குடி டூவிபுரம், பிள்ளையார் கோவில் தெருவை சோந்த பாலு என்பவரின் மகன் அஜித்குமார் இவரிடம் நண்பராக பழகியுள்ளார்.
கடந்த 2/07/2024 ல் அஜித்குமார் தனக்கு பிறந்த நாள் என்றும், எல்லா நண்பாகளுக்கும் பிறந்த நாள் பார்ட்டி வைப்பதாகவும் கூறி இவரை அழைத்துள்ளார். அஜித்குமார் கூறியதை நம்பி அவருடன் சென்றுள்ளார். அவர் அவருடைய அத்தை ஹேமா வீடு என்று கூறி தூத்துக்குடி அண்ணாநகர் 5வது தெரு, 3வது கிராஸ் ரோட்டில் ஒரு மாடி வீட்டிற்கு இப்பெண்ணை அழைத்து சென்று, இவருக்கு ஜூஸ் மற்றும் கேக்கை சாப்பிட்டுக் கொண்டிரு என்று கொடுத்துள்ளார். இரு எல்லாரும் வருவார்கள் என கூறியுள்ளார். சிறிது நேரத்தில் என்ன நடந்தென்று தெரியவில்லை மயக்கம் அடைந்துள்ளார். பின்னர் மயக்கம் தெளிந்து பார்த்தபோது தனது மேலாடை மற்றும் உள்ளாடை அவிழ்கப்பட்டு அரையும் குறையுமாக நிர்வானமாக இருந்துள்ளார். இது குறித்து நான் கேட்டபோது ஆமாடி நான் தான் தப்பு பண்ணினேன் உன்னால் என்ன செய்ய முடியும் என்று திமிராக பேசவே இரு உன் தாய் மற்றும் ஹேமா அத்தையிடம் சொல்கிறேன் என்னை சீரளித்து விட்டாய் என்று கூற அவர்களுக்கு எல்லாம் தெரியும் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் என்னை நிர்வானமாய் பாலியல் சீண்டலில் வீடியோ காண்பித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேண் என்று மிரட்டினான் நான் செய்வதெரியாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.
பின்னர் தான் தெரிந்தது என்னை நிர்வாணமாய் பாலியல் சீண்டலில் வீடியோ எடுக்க ஜூஸ் கொடுத்ததும் ஹேமா அவர்கள் உதவியுடன் வீட்டை பயன்படுத்தியதும் தெரியவந்தது என்னுடன் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதை வைத்து மிரட்டி நீ கனவன் இல்லாமல் தானே இருக்கிறாய் நான் கூப்பிடும் போதுலாம் கன்டிப்பாக வரவேண்டும் என்றும் அவன் வீட்டிலும் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டான் உன் கணவர் இறந்த PF பணம் உன்னிடம் இருப்பது தெரியும் நான் கேட்கும் போதுலாம் பணமும் தர வேண்டும் என்று சுமார் 10,00,00/- (பத்து லட்சம்) வரை பணம் மற்றும் 6-பவுன் தங்க நகை பிரைஸ்லட், 2மோதிரம், 2செயின் 1ஜோடி கம்மல் ஆகிய நகையை என்னை மிரட்டியை பிடிங்கியுள்ளான். அவன் காருக்கு Guarentor க்கு என் ஆதார் வாங்கினான் ஒரு மாதம் கூட சரியாக மாதத் தவணை கெட்டாமல் என் cibil score பாதிக்கிறது இன்னும் பல இன்னல்களை தாங்கியும் வெளியில் நண்பர்களாகவும் உண்மையில் அவன் என்ன சொன்னாலும் கேட்கும் அடிமையாகவும் இருந்தேன் பல பெண்களிடம் இது போன்று இருந்துள்ளான் என்பதும் அவன் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று அதன் பின்பு தான் தெரிந்தது. அவன் சம்பந்தமாக ஆதாரங்கள் இருப்பதாக நினைத்து என் கடையில் வந்து என் Laptop 50000/- ஐம்பதாயிரம், Computer 40000 நாற்பதாயிரம் மதிப்புள்ள பொருளை உடைத்தும் Harddisk திருடியும் சென்றுவிட்டான, பிறகு கடந்த 09/03/2025-ம் தேதியன்று அஜித்குமார் என்னிடம் வந்து மேலும் ரூ.50000/- ஐம்பதாயிரம் பணம் வேண்டும். கூறி என்னை மிரட்டினார் என்னால் பணம் தர முடியாது என்று கூறிவிட்டேன் கட்டையுடன் வந்து என்னை அடித்தார் என்னுடைய vivo v29E- என்ற போன் ரூ.39,000/- மதிப்பு இருக்கும் அந்த போனை ஆத்திரத்தில் ஒங்கி அடித்து நொறுக்கினாான். மேலும் 16/03/2024 அன்று எனக்கு பணம் மொபைல் கேட்டு செல்லும்போது தூத்துக்குடி டூவிபுரம் குமரன் மருத்துவமனை முன்பு கட்டையால் ஒங்கி அடித்து எனது நெற்றியில் தாக்கியதில் பெரும் அளவில் காயம் ஏற்பட்டது. நான் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சென்றேன். அங்கேயும் வந்து புகார் கொடுக்க கூடாதுன்னு வீடியோ வைத்தும் மற்றும் கொலை மிரட்டலும் விடுத்தான் கடந்த 05/04/2025-ந் தேதி காலை 11.00 மணி அளவில் எனது வீட்டின் அருகில் கார் ஒர்க்ஸ் ஷாப் உள்ளது அங்கு அஜித்குமார் நின்று கொண்டிருந்தான். நான் நேரில் சென்று என்னிடம் இருந்து என்னை ஏமாற்றி வாங்கிய பணம் கொடு என்று கேட்டு விட்டு வந்து விட்டேன் அன்று இரவு செந்தில்குமார், முத்து ஆகிய இருவரும் சேர்ந்து பொது இடத்தில் என்னை மானபங்கம் செய்தார்கள் என்னை அசிங்கமாக திட்டினார்கள். பொது வெளியில் ஆடையை பிடித்து இழுத்தார்கள் உடனே நான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன் இதை அறிந்து எனது வயதான தந்தையை நடுரோட்டில் வைத்து கொலை வெறி தாக்குதல் செய்தார்கள் என் தந்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 8 நாட்கள் அனுமதிக்கப்பட்டும் (Bailable section ல்) வழக்கு பதிந்து அன்று முதல் இன்று வரை தெற்கு காவல் நிலைய போலீசார் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய விசாரணை நடத்தாமல் குற்றவாளிகளை கைது செய்யாமல் உள்ளனர் என்று கூறிய அவர் ,தற்போது தன்னிடம் பணம் கேட்டு மிரட்டி வருவதுடன் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என தொடர்ந்து மிரட்டி வருவதுடன் தான் செல்லும் பகுதிகளுக்கு பல்வேறு நபர்களை வைத்து மிரட்டி வருவதாகவும் இது தொடர்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் அஜித் குமார் மற்றும் அவரது அக்காள் கணவரான செந்தில்குமார் மற்றும் அஜித் குமாரின் தாய் உமா மற்றும் ஹேமா ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
ஆனால் காவல்துறையினர் இது தொடர்பாக அரிசி கடத்தல் கும்பலைச் சேர்ந்த அஜித்குமார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யாமல் பாதிக்கப்பட்ட பெண்ணை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்த அவர் தனக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக தன்னை மிரட்டி வரும் குற்றவாளிகள் மீது கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்
தூத்துக்குடியில் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போன்று இளம் விதவைப் பெண்ணை மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி வரும் குற்றவாளிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சந்தேகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது
மேலும் அரிசி கடத்தல் குற்றவாளியான அஜித் குமார் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கார் முன்பு அறிவாளால் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.