தூத்துக்குடி கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை!
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ஆண்டி (எ) மட்டி மகன் முனியசாமி (70/2022) என்பவரை கடந்த 17.06.2022 அன்று வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் வைத்து குடும்ப பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கில் அவரது உறவினரான திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் சின்னத்தம்பி 32/2025) மற்றும் சின்னதம்பியின் நண்பரான கலைஞர்நகர் பகுதியைச் சேர்ந்த முத்து மகன் கருப்பசாமி (24/2025) ஆகியோரை வடபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கணம் நீதிபதி திருமதி. பீரித்தா அவர்கள் இன்று (09.09.2025) குற்றவாளிகளான சின்னத்தம்பி மற்றும் கருப்பசாமி ஆகிய இருவருக்கும் தலா ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானபிரகாசம் அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் சிலம்பரசன் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான் பாராட்டினார்.
இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 18 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.