திருச்செந்தூர் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த குருபாதம் மகன் ஜெயசிங் (43/25) என்பவரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கணம் நீதிபதி பீரித்தா இன்று (31.07.2025) குற்றவாளி ஜெயசிங் என்பவருக்கு ஆயுள் தண்டனை, ரூபாய் 10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் லிங்ககனி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான் பாராட்டினார்.