மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2000 அபதாரம்!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜபுஷ்பம் (26) என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 19-06-2016 அன்று ராஜா புஷ்பத்தை அவரது கணவர் நவீன்குமார் (32) அடித்து கொலை செய்த வழக்கில், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மீனாட்சிநாதன் புலன் விசாரணை செய்து கடந்த 26.07.2016 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திரு. மாதவ ராமானுஜம் அவர்கள் (31.07.2024) குற்றவாளியான நவீன்குமார் என்பவருக்கு இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின்படி ஆயுள் தண்டனை ரூபாய் 2,000/- அபராதமும், இந்திய தண்டனைச் சட்டம் 316 பிரிவின்படி 7 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை ரூபாய் 1000/- அபராதமும் விதித்து மேற்படி சிறை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தவிட்டு தீர்ப்பு வழங்கினார்.