தூத்துக்குடியில் உலக நன்மைக்காக  ஏராளமான இஸ்லாமியர்கள் நடை பயண பேரணி! 

தூத்துக்குடியில் உள்ள பாரம்பரிய ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை நடத்தும் தூத்துக்குடியில் உள்ள அனைத்து மஹல்லா இணைந்து மீலாது நபி விழா கொண்டாடப்பட்டது. உலக நன்மைக்காக இஸ்லாமிய மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது‌. தூத்துக்குடி பீர் அப்பா தர்கா முன்பு துவங்கிய இந்த பேரணியை ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் மீராசா மறைக்கார் துவங்கி வைத்தார்.   இந்த பேரணி ஜெய்லானி தெரு, மீனா கானா தெரு, தெற்கு புது தெரு,  வ உ சி சாலை வழியாக ஜாமியா பள்ளிவாசல் வந்தடைந்தது‌  பின்னர் ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம்கள் அப்துல் அழிம், சதக்கத்துல்லா,  ஆகியோர் உலக நன்மைக்காகவும் விவசாயம் செல்வம் செழித்திட பிரார்த்தனை செய்தனர். இதில் பள்ளி வாசல் செயலாளர் எம் எஸ் எப் ரகுமான், துணைத் தலைவர் சாகுல் சிராஜுதீன்,  உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.