கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர் தினம் கோவில்பட்டி வி.எஸ்.எஸ் சவுண்ட் சர்விஸ் அலுவலகத்தில் வைத்து நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் செப்டம்பர் 4ம் தேதி செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உள்ளிட்ட பல்வேறு விஞ்ஞானிகள் செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்த்து அதன் மூலம் உயர் கல்வி கற்று உயர் பதவிகளை அடைந்துள்ளனர்.செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர்களை ஊக்கப்படுத்தும்,விதமாக நாடு முழுவதும் பேப்பர் பாய் தினம் கொண்டாடப்படுகிறது.கோவில்பட்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்திதாள்களை இல்லங்களில் சேர்ப்பவர்களை பாராட்டி சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார் ,ரோட்டரி சங்க செயலாளர் சரவணன்,பப்ளிக் இமேஜ் தலைவர் முத்து முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் முத்து செல்வம் கலந்துகொண்டு தினசரி செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர்களுக்கு சால்வை அணிவித்து பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்க்கும் பாலமுருகன் நன்றி கூறினார்.
தூத்துக்குடி
செய்தித்தாள்களை இல்லங்களில் சேர்ப்பவர் தினம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கண்தானம் குறித்த ஆட்டோ விழிப்புணர்வு பயணத்திற்கு கோவில்பட்டியில் வரவேற்பு!
அடுத்த
எரிந்த நிலையில் காரில் ஆண் சடலம்?
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026