கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு - வடக்கு இலந்தைகுளம் பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் மாரியப்பன் (54/2022) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் வடக்கு இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த பூல்பாண்டி மகன் காளிப்பாண்டி (எ) காளி (31) என்பவரை கயத்தாறு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திருமதி. ப்ரீத்தா அவர்கள் இன்று (16.04.2025) மேற்படி குற்றவாளி காளிப்பாண்டி (எ) காளி என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர்கள் விஜயகுமார், பாஸ்கரன் ஆகியோருக்கும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் அவர்களையும் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ரெங்காலட்சுமி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.