தூத்துக்குடியில் கனிமொழி 3.60 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி : அமைச்சர்கள் வாழ்த்து!

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி வெற்றி  பெற்றதை தொடர்ந்து தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன், தமிழக கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் நேரில் சந்தித்து கனிமொழி கருணாநிதி எம்.பி.-க்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக கழக துணை பொது செயலாளர் கனிமொழி கருணாநிதி 2வது முறையாக தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு  சுமார் 3.60 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். இதையொட்டி தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதிக்கு, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்   மற்றும் திமுக நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமன்றி இரண்டாவது முறையாக கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதை மாவட்டம் முழுவதும் திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்...