ஸ்ரீவைகுண்டம் அருகே கைப்பந்து வேண்டுமென வாகனத்தை மறித்த சிறுவர்கள்:உடனே வாங்கி கொடுத்து  ஏற்படுத்திய கனிமொழி  எம்.பி!


தூத்துக்குடி பாராளுமன்றத் தேர்தலில்   இரண்டாவது முறையாகப் போட்டியிட்டு அதிகப்படியான  வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். 

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்  அருகே உள்ள பெரியதாழை பகுதிக்கு சென்று கொண்டு இருந்தபோது, கனிமொழி  எம்.பியின் வாகனத்தை சிறுவர்கள் சிலர் இடைமறித்துள்ளனர்.

உடனே சிறுவர்களை காண வாகனத்தை நிறுத்திய  கனிமொழி அவர்களுடன் அன்போடு உரையாடினார். சிறுவர்கள் தங்களுக்கு கைப்பந்து வேண்டுமென உரிமையோடு கனிமொழியிடம் கோரிக்கை விடுத்த நிலையில், அவர்களை பெரியதாழை பஜார் பகுதியில்  உள்ள கடைக்கு அழைத்துச் சென்று கைப்பந்துகள், கைப்பந்து வலைகள் மற்றும் உபகரங்களை வாங்கி கொடுத்து வாழ்த்தி அனுப்பினார்.