தூத்துக்குடி அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை உதவிகள் ஏற்பாடு செய்த கனிமொழி MP!
தற்போது தமிழக முழுவதும் இதை தொடர் மழையின் பெரும்பாலான விவசாய நிலங்கள், சாலைகள், அணைகள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பாக பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள் வீட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அடிப்படை வசதிகள்,நிவாரண உதவிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்டம்ஆத்தூர் தாமிரபரணி ஆற்றுப் பாலம் பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, தெற்கு ஆத்தூர் உள்ள வீரபாகு திருமண மண்டபத்தில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ள, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவு ஏற்பாடு குறித்தும் கனிமொழி எம்.பி கேட்டறிந்தார்.