தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்ட கனிமொழி MP!


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைபடி தூத்துக்குடி மாநகர கடற்கரை பகுதிகளை மிகவும் சுத்தமாக வைத்திருக்கும் விதமாக முத்து நகர் கடற்கரை பகுதிகளைத் தூத்துக்குடி மாநகராட்சி உடன் இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை (Environmentalist foundation of India) இணைந்து சுத்தம் செய்கிறது. இந்த நிகழ்ச்சியை,  திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி  தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். 



தொடர்ந்து முத்து நகர் கடற்கரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குப்பைகளை கனிமொழி  அகற்றி தூய்மை செய்தார். 


இந்தத் தூய்மை பணியின் போது   சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோரும் குப்பைகளை அகற்றினார்.