திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணி!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று (09.06.2025) வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவை முன்னிட்டு காவல்துறையினரின் பாதுகாப்பு பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று கோயில் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு ஆய்வு செய்து காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.