தூத்துக்குடி அருகே இரட்டை கொலை வழக்கில் இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கால்வாய் பகுதியைச் சேர்ந்த சிவசுப்பு மகன் சண்முகம் (67/13) மற்றும் நம்பி மகன் பட்டமுத்து (32/13) ஆகியோரை கடந்த 25.01.2013 அன்று முன்விரோதம் காரணமாக கால்வாய் மாதங்கோவில் தெருவில் வைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் கால்வாய் பகுதியைச் சேர்ந்தவர்களான நம்பி மகன் மணி (57/2025), இசக்கி மகன் மாசாணம் (38/2025) ஆகியோர் உட்பட மொத்தம் 15 எதிரிகளை செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம் இன்று (01.09.2025) குற்றவாளிகளான மணி மற்றும் மாசாணம் ஆகிய இருவருக்கும் தலா இரட்டை ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூபாய் 20,000/- அபராதம் விதித்தும் ஏனைய 13 எதிரிகளை விடுதலை செய்து உத்தரவிட்டும் தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பட்டாணி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் அமுதாசூர்யா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான் பாராட்டினார்.