தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு!
தூத்துக்குடி நந்தகோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மனைவி பேச்சியம்மாள் (84), இந்நிலையில் வீட்டில் வெண்ணீர் போடுவதற்காக ஹீட்டர் மெஷின் பொருத்தும்போது மின்சாரம் தாக்கியதில் எதிர்பாராத விதமாக பேச்சியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.